எவர்வின் பள்ளியில் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

50பார்த்தது
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரமாண்ட நிகழ்ச்சி எவர்வின் பள்ளியில் நடைபெற்றது.

இந்த பள்ளியின் வளாகத்தில் 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து 50 அடி நீளம் 30 அடி அகலம் கொண்ட ஒரு விரல் புரட்சி ரங்கோலி கோலம் வரைந்தும் அதில் தேசிய கொடி மீது வாக்குப்பதிவு செய்யும் விரலை பிரம்மாண்டமாக வரைந்திருந்தனர்.

மேலும் இந்திய வரைபடத்தின் மீது ஒரு வாக்குப்பதிவு விரலும் வாக்குப்பதிவு இயந்திரம் இந்திய நாடாளுமன்றம் என அருகருகே பெரிய வடிவிலான ரங்கோலி கோலங்களையும் ஆசிரியர்கள் வரைந்த வண்ணங்கள் அனைவரையும் கவர்ந்தது.

இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டல அலுவலர் முருகன் செயற்பொறியாளர் செந்தில்நாதன் எவர்வின் பள்ளிக்கூடம் சிஏஓ மகேஸ்வரி மற்றும் முதல்வர் புருஷோத்தமன் ஆகியோர் உட்பட இதில் கலந்துகொண்டு சிறப்பித்து ஒருவிரல் புரட்சி , நம் ஓட்டு, நம்பிரதமர், ஓட்டு போடுங்கள் , கேள்வி கேளுங்கள் என்ற வாசகங்களை நினைவு கொள்ளும் வகையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி