தமிழ்நாடு முழுக்க நாளை கடைகள், ஹோட்டல்கள் இயங்காது

52பார்த்தது
தமிழ்நாடு முழுக்க நாளை கடைகள், ஹோட்டல்கள் இயங்காது
மதுரையில் நடைபெற உள்ள வணிகர் சங்க மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைகளில் பொருட்கள் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் முன்கூட்டியே வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடக்கும் 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநில மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரையில் ஒன்று கூட உள்ளனர்.

தொடர்புடைய செய்தி