ஆந்திராவிலிருந்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 4பேர் கைது

1032பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லை பொன்பாடி போலீஸ் சோதனைச் சாவடியில் 2024 மக்களவை தேர்தலுக்காக  ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.  அப்பொழுது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த தமிழக பேருந்தை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது அந்த பேருந்தில் இருந்த 4  வாலிபர்களின் உடமைகளை சோதனை செய்தபோது அப்போது அந்த பையில் மறைத்து வைத்திருந்த 22 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்து  திருத்தணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி  விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆரோமல் (22) அகில்தேவ் (29) நசீம் (21) பிரண்ட்ஸ் (24) என்பது தெரியவந்தது  இவர்கள் 4 பேரும்  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியிலிருந்து 22 கிலோ கஞ்சாவை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு திருப்பதி வந்து அங்கிருந்து  தமிழக பேருந்தில் பயணம் செய்து சென்னையிலிருந்து கேரளாவிற்கு செல்வதற்காக திட்டம் தீட்டியது  போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.   இதனையடுத்து  இந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்து இவர்கள் வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து திருத்தணி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி