நீங்க ஆசைப்பட்டா நான் அரசியலுக்கு வர்றேன்!

66312பார்த்தது
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தேர்தல் வருகிறது அது குறித்து மக்களுக்கு எதாவது அறிவுரை கூற விரும்புகிறீர்களா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, எல்லாருக்கும் ஓட்டுப்போட உரிமை உள்ளது. ஆனால் யாருக்கு ஒட்டு போடுகிறோம் என யோசித்து போடுங்கள் என கூறியுள்ளார். மேலும் நீங்கள், வரும் காலத்தில் அரசியலுக்கு வர ஆசை உள்ளதா கேட்ட கேள்விக்கு, எனக்கு ஆசை இருக்கா என்பதை விடுங்கள், உங்களுக்கு நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளதா? உங்களுக்கு ஆசையாக இருந்தால் நான் அரசியலுக்கு வர ரெடி என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி