திருத்தணியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் தூய்மைப் பணிகள் மற்றும் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளியில் கழிவறைகள், தூய்மை பணிகள் சரியான முறையில் பராமரிப்பு செய்யாதது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை அறிவுறுத்தினார்.