திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என பல்வேறு மாநிலங்களில் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோயில் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி 17 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை மற்றும் திருப்பணி காணிக்கை என மொத்தம் 80 லட்சத்து 7 ஆயிரத்து 917 ரூபாய் பணம், 234 கிராம் தங்கம், 3456 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருப்பதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.