திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும், இந்த திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர நாள்காட்டி விற்பனை செய்து வருகின்றனர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒரு லட்சம் மாதாந்திர நாள்காட்டி ரூபாய் 20 ரூபாய்க்கு திருக்கோயில் நிர்வாகம் விற்பனை செய்தனர் இரண்டு விதமான முருகப்பெருமான் படத்துடன் மாதாந்திர நாள்காட்டி விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது 2025 ஆம் ஆண்டு மாதாந்திர நாள்காட்டி முருகப்பெருமான் படத்துடன் மற்றும் இந்த ஆண்டு மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோயில் படத்துடன் மாதாந்திர காலண்டர். திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் க. ரமணி, வெளியிட்டார். முதல் காலண்டர் பெற்றுக் கொண்டு விற்பனையை காசு கொடுத்து வாங்கி தொடங்கி வைத்தார்.