பயணிகளிடம் செல்போன் பறித்த இருவரை பொதுமக்கள் பிடித்து தர்மடி

57பார்த்தது
திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தினசரி 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பேருந்திற்காக திருத்தணியை சேர்ந்த ரியானா என்ற பெண் அவரது கணவருடன் வந்தவாசி செல்வதற்கும், அதேபோல் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரும், இவர்களுக்கு அருகில் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வதற்காக திருத்தணி அடுத்த தாழவேடு பகுதியைச் சேர்ந்த கொல்லாபுரி அவரது மனைவி ஆகியோரம் பேருந்துக்காக காத்திருந்தனர்.

மேற்கண்ட மூவரிடமும் 2 பேர் செல்போனை பறித்துக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து ஓட முயற்சி செய்தனர். அப்போது ஒரு திருடன் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையில் பதுங்கிக் கொண்டான். அவனை தர்ம அடி கொடுத்து பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.  

விசாரணையில் இவன் ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சிவராம் என்பது தெரிய வந்தது.  

திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகில் ஓடும் போது மற்றொரு திருடனையும் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் 15 வயதே ஆன ஆந்திரமாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து செல்போன் பறிகொடுத்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி