கோடிக்கணக்கில் பரிவர்த்தனை: 5 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை.

56பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜப்பேட்டை காலனி மற்றும் மோட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், ஜானகி மற்றும் அருணா ஆகியோர் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் 5 வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புத்துறை போலீசார் இன்று காலை 8: 30 மணியளவில் குமாரராஜபேட்டை மற்றும் மோட்டூர் பகுதியில் உள்ள 5 பேரின் வீடுகளில் விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் வங்கி கணக்கில் எவ்வாறு கோடிக்கணக்கில் பணம் பரிகாரதனை நடைபெற்றது. யாருடைய பணத்தை பரிவர்த்தனை செய்தார்கள். எதற்காக அந்த பணம் பயன்படுத்தப்பட்டது போன்ற கோலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 9 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி