திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு 1. 29 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தினர் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும்
இந்த திருக்கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா மாநிலம், கர்நாடக மாநிலம், போன்ற பகுதியில் இருந்து சாமி தரிசனத்திற்கு வருகின்றனர்
அப்படி சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் பணம் நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்
மலைக்கோவிலில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் ரமணி, மேற்பார்வையில்
திருக்கோயில் ஊழியர்கள் திருக்கோயில் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் என்னும் பணியினை மேற்கொண்டனர்
1) பணம் -ரூபாய் 1, 29, 93, 775/-கோடி
2) தங்கம்-635, கிராம் ,
3) வெள்ளி-9, 485, கிராம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.