பராமரிப்பு இல்லாத நிழற்குடை வெயிலில் பயணியர் தவிப்பு

71பார்த்தது
பராமரிப்பு இல்லாத நிழற்குடை வெயிலில் பயணியர் தவிப்பு
திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா ஊராட்சியில், திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. இந்த நிறுத்தத்தில் இருந்து, 1000க்கும் மேற்பட்டோர் அரக்கேணம், திருவள்ளூர், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

தற்போது, இந்த நிழற்குடை பாழடைந்த நிலையில் உள்ளதால் முதியவர்கள், பெண்கள் கடும் வெயிலில் சாலையோரத்தில் நிற்க இடமின்றி தவிக்கின்றனர். மேலும், பேருந்துக்காக சாலையில் காத்திருப்பதால் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய நிழற்குடையை அகற்றி விட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி