கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆறாய் ஓடும் குடிநீர்

59பார்த்தது
கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆறாய் ஓடும் குடிநீர்
கரையான்சாவடி முதல் சென்னீர்குப்பம் செல்லும் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முடிந்த நிலையில் பல்வேறு இடங்களில் இன்னும் பணிகள் முடிவடையாததால் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பாக கரையான்சாவடி, நாவலர், பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை அங்கு எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை மேலும் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அங்கு பொது மக்களுக்கு பைப் மூலம் குடிநீர் அனுப்பபட்டு வரும் பைப் லைன் உடைந்து குடிநீரானது ஆறாய் ஓடுகிறது இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் தற்போது இந்த பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியே சென்று வர வேறு வழி இல்லாததால் தற்போது தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகிலேயே ஆபத்தான முறையில் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதனால் பெண்களும், வயதானவர்களும், சிறுவர்களும் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவே இந்த பகுதியில் முறையான தடுப்புகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வீணாக செல்லும் குடிநீரை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி