சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பொது விருந்து இன்று நடைபெற்றது பூந்தமல்லி அருகே மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் பின்னர் பொதுமக்களோடு அமர்ந்து மதிய உணவை அருந்தினார் இதை அடுத்து ஏழை எளிய மக்களுக்கு இலவச புடவை வேட்டிகளை வழங்கினார். அப்போது புடவைகளை வாங்க வரிசையில் நின்ற பெண்களிடம் புடவையை கொடுத்து கொண்டிருந்த நிலையில் பெண் ஒருவர் திடீரென அமைச்சர் கொடுத்த புடவையை வாங்காமல் அவருக்கு பிடித்த நிறத்தில் இருந்த புடவையை அவரே எடுத்துக்கொண்டு அங்கிருந்தே சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது. இதை எடுத்து அவர் அளித்த பேட்டியில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் கலந்து கொள்வது அவரது விருப்பம் அவர் சொல்வது தான் கேட்போம் முதல்வர் சொல்வது தான் கட்சிக்கும் என பேசினார்.