2026 சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தற்போதே வேட்பாளர்கள் தேர்வு பணிகளை அக்கட்சி தொடங்கியுள்ளது. வழக்கம்போல 117 ஆண், 117 பெண் வேட்பாளர்களை களமிறக்கப் போவதாகவும், கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்திருந்தார்.