கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை ரூ.1.5 கோடி பறிமுதல் செய்துள்ளது. எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னை, கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் நேற்று (ஏப்ரல்.4) நடந்த சோதனையில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்நிய செலவாணி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.