கடந்த ஆண்டு இயற்கை பேரிடரை சந்தித்த தமிழ்நாட்டிற்கு ரூ.522.34 கோடி கூடுதல் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2024-25 நிதியாண்டில், SDRF ஒதுக்கீட்டில் 28 மாநிலங்களுக்கு ரூ. 20,264.40 கோடி நிதி விடுக்கப்பட்டுள்ளது. NDRF ஒதுக்கீட்டில் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது.