தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன் கைது

57பார்த்தது
தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன் கைது
தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (56). மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவரது 2வது மகன் ஜேம்ஸ் (33), தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இவர், அடிக்கடி போதையில் தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது தந்தையிடம் சென்ற ஜேம்ஸ், தனது மனைவியிடம் தவறான எண்ணத்துடன் பேசினாயா? என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி தந்தையை கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி