கூவம் நதிக்கரை குடியிருப்பு பகுதியில் எம்பி ஆய்வு

72பார்த்தது
திருவேற்காடு கூவம் நதி கரையில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இந்த குடியிருப்பு பகுதியை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருவேற்காடு நகர் மன்ற துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சசிகாந்த் செந்தில் எம். பி. யிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கூவம் நதிக்கரையை ஒட்டியுள்ள இந்த பகுதி மேடான இடத்தில் உள்ளது. இதற்குமுன் பல தடவை மழை வெள்ளத்தின் போதும் சிறிதுகூட இந்த பகுதி பாதிக்கப்படவில்லை திருவேற்காட்டின் பூர்வ குடிகளான நாங்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். இந்த ஊரின் பூர்வீக குடிமக்களான எங்களின் இந்த குடியிருப்புகளை அகற்றக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் தற்போது அதிகாரிகள் இந்த குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீண்ட காலமாக குடியிருந்து வரும் எங்கள் குடியிருப்புகளை அகற்றக்கூடாது
என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி