தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "வட மாநிலங்களில் எந்த விகித்தத்தில் தொகுதிகள் மறுவரையறைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு குறித்து தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மக்களின் சார்பாக இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.