100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் முடக்கம்: கவுன்சிலர் வேதனை.

76பார்த்தது
ரூ. 100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் முடக்கம்: மக்களுக்கு சுகாதார மையம் கட்ட இடமில்லையென கவுன்சிலர் வேதனை.

பூந்தமல்லி அடுத்த 145வது வார்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான ரூ. 100 மதிப்புள்ள இடம் தனியாரால் முடக்கப்பட்டிருப்பதாக கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 145வது வார்டு கவுன்சிலர் சத்தியநாதன், தனியார் திருமண்டபத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதில் பேசிய அவர், “145வது வார்டில் கடந்த 50 ஆண்டுகளாக 1. 14 ஏக்கர் மதிப்புள்ள அரசு நிலம் ஒன்று தனியார் நிறுவனம் ஒன்றின் வசம் இருந்து வருகிறது. அதை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மனு கொடுத்திருந்தோம். அங்கு ஆய்வு செய்த பின்னர், நிலத்தில் ஆதரவற்றோம் இல்லம் கட்டுவதற்காக குத்தகைக்கு எடுத்த நிறுவனம் சுற்றுசுவரை மட்டும் கட்டிவிட்டு கட்டடம் எதுவும் கட்டவில்லை என ஆட்சியர் உறுதி செய்தார். இதனால் அந்த இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு அரசாணை வெளியிடப்பட்டது. அரசு உடனே நிலத்தை மீட்க வேண்டும். இதனால் எங்கள் வார்டில் உள்ள ஒரு லட்சம் குடும்பத்தினர் எந்த வித அரசு திட்டத்தையும் பெற முடியால் உள்ளனர்” என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தொடர்புடைய செய்தி