உத்தர பிரதேசம்: அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளில் பிரயன்ஷி (14) என்ற சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார். விராட் கோலி அவுட்டானதை டிவியில் பார்த்த அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிறுமியின் தந்தை அஜய் கூறுகையில், "சம்பவம் நடந்த நேரத்தில் கோலி பேட்டிங் விளையாட களத்தில் இறங்கவில்லை. மகள் மறைந்தது எதிர்பாராதவிதமாக நடந்தது" என்றார்.