இந்தி எதிர்ப்பு போராட்டம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியைக் கருவாக கொண்டு, தற்போது 'பராசக்தி' படம் உருவாகி வருகிறது. படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்புகள் நிலவும் சூழலில், தற்போது சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் கசிந்து வைரலாகி வருகிறது. ஒரு பஸ்ஸில் 'இந்தி வாழ்க' என்ற வாசகங்கள் தமிழில் எழுதப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.