அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் அலுவலகம் அழைப்பு

83பார்த்தது
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் அலுவலகம் அழைப்பு
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட 12 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி