தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 7 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடக்கிறது. இடது கரை கால்வாய் பணியின்போது சுரங்கத்தில் 8 பேர் சிக்கிக்கொண்டனர். ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில், 7 பேரின் சடலங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சகதி குவிந்துள்ளதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரோபோக்கள் மூலம் மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.