பொன்முடி மீது சேறு வீச்சு: பாஜக பெண் நிர்வாகி கைது

64பார்த்தது
பொன்முடி மீது சேறு வீச்சு: பாஜக பெண் நிர்வாகி கைது
விழுப்புரம்: இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது கடந்தாண்டு டிசம்பர் 3-ல் சேற்று சகதியை சிலர் வீசினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணன் (26) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் சேற்று சகதியை வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி முன்னாள் துணை தலைவி விஜயராணி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி