வேங்கைவயல் வழக்கு - 3 பேருக்கு ஜாமின்

50பார்த்தது
வேங்கைவயல் வழக்கு - 3 பேருக்கு ஜாமின்
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு புதுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி குற்றம்சாட்டப்பட்ட காவலர் முரளி ராஜ், முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகிய 3 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கினார். இந்நிலையில், 3 பேரும் புதுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில் நீதிபதி பூர்ணிமா ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி