பழவேற்காட்டில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

1055பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பழவேற்காடு மீன் இறங்கு தளத்தில் நங்கூரம் என்னும் தலைப்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது இதில் 228 நபர்கள் பணி நியமன ஆணைகளும், 59 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆணைகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் டாக்டர். த. பிரபுசங்கர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் டி. ஜெ. கோவிந்தராஜன்,
துரை  சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் கே. வி. ஜி. உமாமகேஸ்வரி ஆகியோர்கள் முன்னிலையில் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
பழவேற்காடு கிராமத்தில் வசிக்கும் மீனவ மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், பழவேற்காடு மீனவ மக்களுக்கு "நங்கூரம்" எனும் சிறப்பு நிகழ்வின் வாயிலாக 11. 02. 2024 மற்றும் 12. 02. 2024 ஆகிய நாட்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
11. 02. 2024 நடைபெற்று வேலைவாய்ப்பு முகாமில் 18 வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டன. 119 ஆண் வேலைநாடுநர்களும், 159 பெண் வேலைநாடுநர்களும் கலந்து கொண்டனர். இதில் 76 ஆண் வேலைநாடுநர்கள் மற்றும் 21 பெண் வேலைநாடுநர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி