விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச., 02) ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விழுப்புரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உதவிப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.