சென்னை விமான நிலையம் இன்று (நவ.30) இரவு 7.30 மணி வரை ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை அதிகாலை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையம் வந்துள்ள பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.