திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலையிலிருந்து பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. அங்கிருந்த வீடுகளின் மேல் விழுந்ததில், அந்த இடிபாடுகளில் 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 100 அடி உயரத்தில் இருந்து மண், பாறைகள் சரிந்து விழுந்ததில் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த NDRF வீரர்கள் மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.