சென்னை விமான நிலைய செயல்பாடுகளை நேற்று நள்ளிரவு 1 மணி முதல் தொடங்கப்பட்டது. அனைத்து பயணிகளும் தங்களின் பயண சேவைகள் தொடர்பாக சம்பந்தபட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், தற்போது சென்னையில் 26 பன்னாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்நாட்டு சேவையில் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.