சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று முதல் தற்போது வரை ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெருங்களத்தூர் பெரிய ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறிவருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அந்தச் சாலை வழியாக பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.