கர்நாடக மாநிலத்தின் ஹோஸ்கோட் நகரை சேர்ந்த 17 வயதான சிறுமியை நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியின் தந்தை போலீசில் அளித்த புகாரில், என் மகளை கவர்ந்து பேசி மயக்கிய சேத்தன் குமார் என்ற நபர் அவரை பலமுறை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் சேத்தன் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.