நடிகர் வேல ராமமூர்த்தி பேத்தி திருமணத்துக்கு தங்க மாலையா?

65பார்த்தது
நடிகர் வேல ராமமூர்த்தி பேத்தி திருமணத்துக்கு தங்க மாலையா?
நடிகர் வேல ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவிக்கும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருக்கும் முருகனின் மகன் விஜய ராகுலுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. தங்கத்தில் மாலை, வரதட்சணையாக ஐநூறு சவரன் நகை என திருமணம் குறித்து ஒரு தகவல் பரவியது. இது குறித்து முருகன் கூறும்போது, "ஐநூறு பவுன் வரதட்சணை அது இது என இஷ்டத்துக்கு சமூகவலைதளங்களில் பேசுகின்றனர். இது போன்ற தகவல்கள் மனதுக்கு சின்ன வருத்தத்தை கொடுத்தது" என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி