மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 100 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் தெருக்களில் சிதறிக் கிடந்தன. போட்டியின் நடுவே நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் மோதல் தொடங்கியது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மைதானத்திற்குள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.