ஃபெஞ்சல் புயல்: இடிந்து விழுந்த காவல் உதவி மையம்

84பார்த்தது
சென்னை மெரினா கடற்கரை அருகே கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் லூப் சாலையில் அமைக்கப்பட்டிருந்த காவல் உதவி மையமானது ஃபெஞ்சல் புயலால் வீசப்படும் கடுமையான காற்றின் காரணமாக 10 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் காவலர்களோ, பொதுமக்களோ அந்த போலீஸ் பூத் அருகே இல்லாத காரணத்தால், உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி