தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் இன்று (டிச.2) காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.