சாலைகள் குண்டும் குழியுமாய் சேதம்: கிராம மக்கள் போராட்டம்

79பார்த்தது
திருவள்ளூர்

ஆமூர் ஏரியில் செயல்படும் சவுடு மண் குவாரியில் மண் எடுத்துச் செல்லும் லாரிகளால் கிராமத்திற்கு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாய் சேதமாகி பாதிப்பு கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே
தடபெரும்பாக்கம்
ஆமுர் ஏரியில் அதானி சாலை அமைக்கும் பணிகளுக்காக
மண் குவாரி செயல்படுகின்றது முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தில் போடப்பட்ட ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பிலான சாலையானது அவ்வழியாக மண் ஏற்றி கொண்டு செல்லும்
லாரிகளால் புதிதாக அமைக்கப்பட்ட கிராம சாலையானது
முற்றிலும் சேதம் அடைந்தது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த வடக்குபட்டு ஆமூர் கிராம மக்கள் திரண்டு லாரிகளை சிறை பிடித்து வாரியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் ஏரியிலேயே ஒன்றன்பின் ஒன்றாக நின்றது. தகவல் அறிந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரசம் மேற்கொண்டனர் பின்னர் தற்காலிகமாக சாலை குண்டும் குழியுமாக கிடந்ததை ஜல்லி கற்களைக் கொட்டி சீரமைத்து மீண்டும் மண்லாரிகளை இயக்கினர் சாலையை முறையாக மீண்டும் புதிய சாலையாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி