தொகுதி மறுவரையறை தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டுக் குழு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் எ.வ.வேலு, எம்.பி.வில்சன் ஆகியோர் வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். நேற்று (மார்ச்.11) ஒடிசாவில் நவீன் பட்நாயக்கை டி.ஆர்.பி.ராஜா சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.