மும்பை: தன்னிடம் டியூசன் படிக்கும் 13 வயது மாணவரிடம் இன்ஸ்டாகிராமில் பெண் பெயரில் ஐடி தொடங்கி ஆசிரியர் ஒருவர் நட்பானார். பின்னர் மாணவரின் நிர்வாண புகைப்படத்தை வாங்கிய ஆசிரியர் அதை வைத்து மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். தொடர்ந்து வீடியோவும் எடுத்து மிரட்டிய நிலையில் நடந்ததை மாணவர் தனது தாயிடம் சொன்னார். இது குறித்த புகாரில் போலீசார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.