திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் ஜெயா டிவி சிஇஓ அவர்களுக்கு சொந்தமான நீச்சல் மற்றும் பேட்மிட்டன் விளையாட்டுத் திடல் உணவகத்துடன் ஜெ கிளப் அமைக்கப்பட்டுள்ளது அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து பேட்மிட்டன் நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டபோது அவர் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து செய்தியாளர்களை நாளை சந்திக்கிறேன் என தெரிவித்துச் சென்றார்.
நடிகர் விஜய் திருமாவளவன் விவகாரம் கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சசிகலாவின் உறவினர் நிகழ்வில் திருமாவளவன் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன் என தெரிவித்து சென்றது மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.