கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா துவக்கம்

65பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற சவுந்தரவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பரத்வாஜ முனிவர் இத்தலத்திற்கு வருகை தந்து பெருமாளை போற்றிப்பாடியதாக வரலாறு கூறுகிறது.
வரலாற்று சிறப்புவாய்ந்த இக்கோவிலின் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக கரிகிருஷ்ண பெருமாளுக்கும் சவுந்தரவள்ளி தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க வேதமந்திரங்கள் ஓதியபடி ஆச்சார்யார்கள் கொடிப்பட்டத்தை கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர். இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தி மகாதீபாராதணை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து தங்கமுலாம் தொட்டியில் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக எம்பெருமான் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 27ஆம் தேதி நள்ளிரவு சிவனும் பெருமாளும் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா நடைபெற உள்ளது. சைவம் பெரிதா, வைணவம் பெரிதா என்ற சமய மோதல் உச்சத்தில் இருந்த நேரத்தில் அகத்தியர், பரத்வாஜர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று ஹரியும் ஹரனும் பக்தர்களுக்கு ஒருசேர காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது. இதுவே சந்திப்பு

தொடர்புடைய செய்தி