சோழவரம் அருகே உயரழுத்த மின்சாரம் பாய்ந்து ஐந்து மாத சினையாக இருந்த சீமை பசு பரிதாபமாக உயிரிழந்தது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் மாளிவாக்கம் ஊராட்சி கங்காளி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகினி இவரது 5 மாத சினை பசுவினை வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த போது உயர் அழுத்த மின்கம்பம் அருகே மின்கம்பி அறுந்து மின்சாரம் பாய்ந்ததில் சினை பரிதாபமாக உயிரிழந்தது. மீஞ்சூர் கோட்ட மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து உயிரிழந்த மாட்டை மீட்டனர். நல்வாழ்த்துக்கள் ராகினி உயிர் தப்பினார். மின்சாரம் தாக்கி கிராமத்தினர் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.