மாதவரம் - Madhavaram

சோழவரம்: கணவரை கொன்று விட்டு தலைமறைவான மனைவி கைது

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காட்டுநாயக்கன் நகர் பகுதியில் வசித்துவந்தவர் ஆட்டோ ஓட்டுனர் கருணாகரன் இவரது மனைவி சரஸ்வதி கருணாகரன் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி குடித்துவிட்டு பிரச்சினையில் ஈடுபட்ட கருணாகரனை அவரது மனைவி வீட்டிலிருந்த சுத்தியல் எடுத்து அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார் இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்துடன் மயங்கி அவர் கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி அங்கிருந்து தப்பி ஓடினார் பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சோழவரம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலை மறைவான அவரது மனைவி சரஸ்வதியை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் குடிபோதையில் தகராறு ஈடுபட்டதால் சுத்தியலில் அடித்து கொன்றதாக தெரிவித்ததை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மது போதையில் கணவனை சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా