சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (பிப். 24) பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற உள்ள 6-வது லீக் போட்டியில் வங்கதேச அணி, பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் நியூசிலாந்து அணி வென்றால் அரையிறுதியை உறுதி செய்து விடும். அதே நேரம் வங்கதேச அணி தனது முதல் லீக்கில் இந்தியாவிடம் தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும்.