திண்டுக்கல்: வேடசந்தூரை சேர்ந்த சந்தோஷ் (30) தனது மகன் அஸ்வந்த் (7) மற்றும் மகள் சாய் அஸ்மிதா (5) ஆகியோருடன் பைக்கில் சென்றார். அப்போது அரசுப் பேருந்து பைக் மீது மோதியதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சாய் அஸ்மிதா உயிரிழந்தார். அஸ்வந்துக்கு தீவிர சிகிச்சை தரப்படுகிறது, சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.