போரூர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தனியார் பன்னோக்கு மருத்துவமனையை சிறு குறு தொழில் துறை அமைச்சர் தா. மோ அன்பரசன் திறந்து வைத்தார்.
பூந்தமல்லி அருகே போரூர் அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெஸ்டோ பன்னோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் தாமோ அன்பரசன், எம்பி கலாநிதி வீராசாமி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அப்போது ரிப்பன் வெட்டி மருத்துவமனையை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பரசன், பின்னர் மருத்துவ உபகரணங்களையும் மருத்துவமனையின் உட்கட்டமைப்பையும் பார்வையிட்டார்.