திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பண்பாக்கம் கிராமத்தில் ஆச்சி நிறுவனத்தின் உணவு பொருள் பதப்படுத்தும் புதிய தொழிற்சாலையினை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இருந்து இன்று தொடங்கி வைத்தார் வேர்ல்ட் ஃபுட் இந்தியா 2024 நிகழ்ச்சியானது பாரத் மண்டபத்தில் இன்று துவங்கி வருகிற 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது அதன் முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பண்பாக்கம் கிராமத்தில் ரூபாய் 84 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆச்சி மசாலா குழுமத்தின் புதிய உணவு பொருள் பதப்படுத்தும் ஆலையினை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஆட்சி குழும இயக்குனர் பத்மசிங் ஐசக் ஆட்சி குழுமம் நிர்வாக இயக்குனர்கள் அஸ்வின் பாண்டியன் மற்றும் அபிஷேக் ஆபிரகாம் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் ஆச்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்