திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டைகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்குள்ள ரத்னா உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் விற்கப்படுவதாகவும் தடையின்றி மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.