கறிவேப்பிலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. காலையில் 3 முதல் 4 பச்சை கறிவேப்பிலை இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிறு உப்புதல் ஆகியவற்றை நீக்கும். கறிவேப்பிலை மாலைக்கண் நோய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.